Sunday 29 November 2015

3. தீபாவளி மருந்து (Deepavali marunthu)

தீபாவளி மருந்து

  1. சித்தரத்தை          15 கிராம்
  2. சுக்கு                        25 கிராம்
  3. மிளகு                      20
  4. ஓமம்                       25
  5. தனியா                    25
  6. சீரகம்                       20
  7. ஏலக்காய்    20 காய் (தோலி நீக்கவும்)
  8. பாதாம்           1/8 கப்  (கப் = 6 oz)
  9. ந. எண்ணெய்  1/4 கப்
  10. நெய்   3 Tablespoon
  11. வெல்லம்      1.5 கப்
  12. தேன்                1 Tablespoon
  13. இஞ்சி                     50 கிராம்.  இந்த இஞ்சியை 4 Table spoon  தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். அடியில் தங்கும் சுண்ணாம்பை நீக்கிவிட்டு மேல் தெளிவை எடுத்துவைத்துக்கொள்ளவும்
1 இலிருந்து 8 வரையிலுள்ள சாமானை தனித்தனியாக சூடுபட வறுத்து எல்லாவற்றையும் சேர்த்து mixie  யில்  பொடி செய்து, 1/8 கப் ஜலம், மேலே 13ம் நம்பரில் அரைத்துவைத்திருக்கும் இஞ்சிச்சாறையும் சேர்த்து நைசாக அரைக்கவும். இப்படி அரைத்தவிழுதை கொதிக்கவிடவும். விழுது வெந்தபின் வெல்லத்தைச்சேர்த்துகிளறவும்.மருந்து சுருண்டு வரும்பொழுது நெய்யையும் நல்லெண்ணையும் சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்பொழுது இறக்கவும். சூடு சற்று தணிந்ததும் தேனை சேர்க்கவும்

தீபாவளி மருந்து  ready.

பின்குறிப்பு: அரிசிதிப்பிலி, கண்டதிப்பிலி, வால்மிளகு, தலா 25 கிராம் வீதம் கிடைத்தால், சாமான்கள் 1 to 8 உடன் சேர்க்கலாம்.  இவை கிடைக்காவிட்டாலும் OK.

*************************


1 comment:

  1. நேயர் விருப்பம்:
    1. வற்றல் குழம்பு
    2. பொரிச்ச குழம்பு
    3. சர்க்கரை பொங்கல்
    4. தில் குஷ்
    5. ஆலூ பாவ்
    6. கத்திரிக்காய் துவையல். Thanks !!!

    ReplyDelete