Monday 30 November 2015

5. டோக்ளா. ( Dokla)

                                                              Dokla
1 கடலை மாவு. 1c.  Fresh 'Well , sifted,
2. தண்ணீர்.  1c +2.  t s.
3 . சர்க்கரை. 1T s
4. Citric acid.   1ts

5. உப்பு.  1/2ts
6. சமையல் சோடா. 1/2ts
7. கடுகு.  1ts
8. தேங்காய் துருவல். 2Ts
9. கொத்தமல்லித்தழை. (பொடிதாய் நறுக்கிக்கொள்ளவும்.) 1Ts
10. பச்சைமிளகாய். (தேவைக்கேற்தபடி நறுக்கிக்கொள்ளவும்).

செய்முறை ---:

2 ,3,4,5, சாமான்களை நன்றாய்கலக்கவும். Juice மாதிரி. பின் கடலை மாவைப்போட்டு கட்டியில்லாமல், கலக்கவும். சோடாவையும்போட்டுக்கலக்கவும். பூத்து வரும், பின்
எண்ணை தடவிய, flat plate ல்கொட்டி, 15 நிமிடம் மூடி, வைத்து ஆவியில் வேகவிடவும்.
பின் கடுகைத்தாளித்து, தேவைக்கேற்ப, நறுக்கிய பச்சைமிளகாய் , மல்லித்தழை, தேங்காய்துருவலுடன் அலங்கரிக்கவும் . விருந்தினரை அசத்திவிடலாம்.

4. கார நிலக்கடலை ( chilli peanut)

                                                காரநிலக்கடலை

நிலக்கடலை                 1. Cup.
கடலை மாவு.                1 Tabele S
அரிசி மாவு.                   1 t s
காரப்பொடி.                 1/2  ts
மஞ்சள் பொடி.              1/2 ts
LG பொடி.                      1/4.  ts
தண்ணீர்.                       4. Tab s
எண்ணை.                    1 Tab sp

செய்முறை --:

எல்லாவற்றையும் கலந்து,  1/2 மணி நேரம் ஊறவைக்கவும், Microwave oven ல்  ஒரு ceramic plate ல்  2 நமிடம் வைத்து, வைத்து, பின் கையால் கலந்து, திரும்ப  திரும்ப த்திரும்ப 2 நிமிடங்களாக வைத்து, கரகரப்பானதும், எடுக்கவும்.

6 to 8 நிமிடங்கள் ஆகலாம்.


Sunday 29 November 2015

3. தீபாவளி மருந்து (Deepavali marunthu)

தீபாவளி மருந்து

  1. சித்தரத்தை          15 கிராம்
  2. சுக்கு                        25 கிராம்
  3. மிளகு                      20
  4. ஓமம்                       25
  5. தனியா                    25
  6. சீரகம்                       20
  7. ஏலக்காய்    20 காய் (தோலி நீக்கவும்)
  8. பாதாம்           1/8 கப்  (கப் = 6 oz)
  9. ந. எண்ணெய்  1/4 கப்
  10. நெய்   3 Tablespoon
  11. வெல்லம்      1.5 கப்
  12. தேன்                1 Tablespoon
  13. இஞ்சி                     50 கிராம்.  இந்த இஞ்சியை 4 Table spoon  தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். அடியில் தங்கும் சுண்ணாம்பை நீக்கிவிட்டு மேல் தெளிவை எடுத்துவைத்துக்கொள்ளவும்
1 இலிருந்து 8 வரையிலுள்ள சாமானை தனித்தனியாக சூடுபட வறுத்து எல்லாவற்றையும் சேர்த்து mixie  யில்  பொடி செய்து, 1/8 கப் ஜலம், மேலே 13ம் நம்பரில் அரைத்துவைத்திருக்கும் இஞ்சிச்சாறையும் சேர்த்து நைசாக அரைக்கவும். இப்படி அரைத்தவிழுதை கொதிக்கவிடவும். விழுது வெந்தபின் வெல்லத்தைச்சேர்த்துகிளறவும்.மருந்து சுருண்டு வரும்பொழுது நெய்யையும் நல்லெண்ணையும் சேர்க்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்பொழுது இறக்கவும். சூடு சற்று தணிந்ததும் தேனை சேர்க்கவும்

தீபாவளி மருந்து  ready.

பின்குறிப்பு: அரிசிதிப்பிலி, கண்டதிப்பிலி, வால்மிளகு, தலா 25 கிராம் வீதம் கிடைத்தால், சாமான்கள் 1 to 8 உடன் சேர்க்கலாம்.  இவை கிடைக்காவிட்டாலும் OK.

*************************


2. அதிரஸம் (Adrisam)

 Here is recipe of Adhrisam.

அதிரஸம். 

ஈர இடித்த அரிசிமாவு  1 c
நொறுக்கிய பாகு வெல்லம் 1/2  c
தண்ணீர்  1/3. C
ஏலப்பொடி. 1/4 t s
செய் முறை-:
வெல்லம் ஜலம் இரண்டையும் சேர்த்து பாகு வைக்கவும் கம்பிப்பதபாகுவரவேண்டும் ( பாகைத்தொட்டு ஆள்காட்டி விரல் கட்டை விரலால் பிரித்தால் ஒரு கம்பி வரும்) ஏலம் கலந்த மாவில் பாகை கொஞ்சமாக கொஞ்சமாய் போட்டுத்தளற கலக்கவும்
(சாம்பார்சாதம்போல்) பின் சற்று ஊறினபின் எண்ணை காய்ந்ததும் இலையில் or plastic லோ தட்டி ஒவ்வொன்றாக எண்ணையில்போட்டு நிதானமாக திருப்பி பொன் நிறம் வந்ததும் எடுக்கவும்

Tips--
அதிரஸம்softக வேண்டுமானால் உடனே அதன் எண்ணெயை கரண்டியால் அமுக்கினால்soft க இருக்கும் 
Cup =6oz t =tea spoon 


********************************** 

1. Vellacheedai (வெல்லச்சீடை)

           வெல்லச்சீடை
இடித்து வறுத்த அரிசிமாவு 1 c
உளுத்தமாவு.    2 teaspoon
வெல்லம்.                         3/4
தேங்காய் பல்.   1/4 c
ஏலப்பொடி.       1/3 t s
தண்ணீர்.         1/3 c
.
செய்முறை---:
வெல்லம் தண்ணீர்இரண்டையும் தேங்காய் பல்லுடன் சேர்த்து பாகு வைக்கவும் பாகு கம்பிப்பதம் வந்ததும்  பின் உளுத்தமாவு
ஏலம்சேர்த்து, பிசைந்து, உருண்டை பண்ணி எண்ணையில் போடவும் பொன்னிறமாக எடுக்கவும் ஆறியபின் கரகரப்பாய்இருக்கும்
Tips--:
நாலுநாள் முன்பே பாகு செலுத்தி பின் செய்யும் நாளில் மைக்ரோ ஓவனில் வைத்து பின் உருட்டி செய்யலாம்.
********************************